நாக்கின் மேல் பல்லை போட்டு பேசாதிருத்தல்
பத்து கவிதைகள் 1 இறங்கி வருதல் ஒரு கலை ___________________ முதலில் யாரும் கூப்பிடாதவனிலிருந்து இறங்கி வந்தேன் இப்பொழுது பணிவு என் தோள்களுக்கு கை வந்த கலை 0o0 2 அது காதலில்லை யாரையும் நேசிக்கும் தூய கண்கள் அதை அதை என மருகும் வணக்கத்தின் சாக்கில் கும்பிட்டேன் . 0o0 3 எவ்வளவு சாவகாசமாக ஒரு சிகரெட் முடிந்துவிடுகிறதோ அவ்வளவு அவசரமாக ஒரு சிகரெட் முடிந்துவிடுகிறது மேலும் சிகரெட்டைப் பற்றி உனக்கென்ன தெரியும்? அது உங்கப்பன் விசிலை கேட்டவன். 0o0 4 மனதில் இரண்டு குரல்கள். ஒன்று, நன்றாக கனத்த ஒலிப்பில் தட்டி எழுப்பி அழுத்தமான எச்சரிக்கையோடு சொன்னது "இங்கிட்டு வேணா நாம அங்கிட்டு போவோம் " அடுத்த நொடியே திரும்ப ஒரு குரல் இது முதல் குரலை மழுங்கடிக்கச்செய்யும் இன்னொரு குரல் ஒரு டீசன்டுக்காக நான் இரண்டாவதுக்குச் செவி சாய்த்தேன் கடைநிலை ஊழியனென கீழ்படிந்து. 0o0 ...
